Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடும் பனி: சுமார் 380 பாடசாலைகள் இயங்கவில்லை

In
Updated: 09:51 GMT, Jan 17, 2018 | Published: 08:09 GMT, Jan 17, 2018 |
0 Comments
1145
This post was written by : Suganthini
sco

வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், வட அயர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இன்று (புதன்கிழமை) 280க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும்  முன்பள்ளிகளிலும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

ஸ்கொட்லாந்தில்  சுமார் 10 ஆயிரம் மாணவர்கள்வரையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காமையைத் தொடர்ந்து, பாடசாலைகளையும் முன்பள்ளிகளையும் மூடியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, ஸ்கொட்லாந்தின்  Dumfries பகுதியிலுள்ள எம்74 வீதியில் நேற்று போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வீதியூடாகப் பயணித்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் நகரமுடியாத நிலையில் காணப்பட்டதுடன், வாகனச் சாரதிகளும் தமது இரவுப்பொழுதை வாகனங்களினுள்ளேயே கழித்துள்ளனர்.

இவ்வீதியூடான போக்குவரத்து  மீட்புக் குழுவினரின் உதவியுடன் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg