Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்டமிழப்பில் ஐந்து சாதனைகளா? புஜாராவுக்கு நேர்ந்த சோகம்

In கிாிக்கட்
Updated: 09:14 GMT, Jan 17, 2018 | Published: 09:14 GMT, Jan 17, 2018 |
0 Comments
1819
This post was written by : Anojkiyan

செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் புஜாரா ஆட்டமிழந்ததன் மூலம் ஐந்து மோசமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

287 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 19 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவர் இரண்டு இன்னிங்ஸூலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவர் பதிவுசெய்த சாதனைகள் பின்வருமாறு:

1.இரண்டு இன்னிங்ஸூலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கும் முதல் இந்திய வீரர்.

2.18 வருடங்களுக்கு பிறகு இரண்டு இன்னிங்ஸூலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கும் முதல் வீரர்.

3.தென்னாபிரிக்க அணிக்கெதிராக இரண்டு இன்னிங்ஸூலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கும் மூன்றாவது வீரர்.

4.தென்னாபிரிக்க மண்ணில் இரண்டு இன்னிங்ஸூலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கும் முதல் வீரர்.

5.மூன்றாவது வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸூலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கும் முதல் வீரர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg