Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ஆமைகள்

In இந்தியா
Updated: 08:57 GMT, Jan 17, 2018 | Published: 08:57 GMT, Jan 17, 2018 |
0 Comments
1232
This post was written by : Kemasiya

வட இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  160 ரஷ்ய கடலாமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போதே, குறித்த ஆமைகள் கைப்பற்றப்பட்டதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆமைகள் உலகில் அழிந்து வரும் ஆமை வகையைச் சேர்ந்ததென, சர்வதேச வனவிலங்கு நிதியம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆமைகள் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும், தோலுக்காகவும் வேட்டையாடப்படுவதால் அந்த இனம் அழிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆமைக்கடத்தல் சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

cfghdtg dzfvdszf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg