Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்3என்2 வைரஸ் தொற்றால் பெருமளவானோர் பாதிப்பு!

In கனடா
Updated: 09:54 GMT, Jan 17, 2018 | Published: 09:54 GMT, Jan 17, 2018 |
0 Comments
1082
This post was written by : Anojkiyan

எச்3என்2 எனப்படும் பாதகமான வைரஸ் தொற்றால் ஏற்படும் சளிக் காய்ச்சல் நோயால், நாடு முழுவதும் டிசம்பர் 30ஆம் திகதி வரையிலான அறிக்கைப்படி 11,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் பொதுச் சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில், 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகவும் எனவும் பொதுச் சுகாதார சேவை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறே நிலைமை தொடர்ந்து செல்லுமானால் எதிர்வரும் மாதத்தில் இந்த எண்ணிக்கை உச்சத்தை தொட்டுவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயினால் வயதானோர் மற்றும் முதியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிய அளவில், குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg