Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி – மாக்கில் வேல்ஸுக்கும் விஜயம்!

In
Updated: 09:42 GMT, Jan 17, 2018 | Published: 09:42 GMT, Jan 17, 2018 |
0 Comments
1114
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவி மேகன் மாக்கிலும் வேல்ஸுக்கு முதற்தடவையாக உத்தியோகபூர்வ விஜயம் செய்யும்போது, அவர்களை பொதுமக்கள் சந்திக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நாளைமறுதினம் (வியாழக்கிழமை) வேல்ஸிலுள்ள கார்டிஃப் (Cardiff ) கோட்டைக்கு வருகைதர எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இவர்களை பொதுமக்கள் சந்திப்பதற்கான வாய்ப்புக் காணப்படுவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வருகையையிட்டு வீதிகள் எதனையும் மூடும் திட்டமில்லையெனும் போதிலும், வேல்ஸ் நகருக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு நலன்விரும்பிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இளவரசர் ஹரியும், அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலும் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்களது திருமணம் வின்ஸ்டர் கோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg