Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக சாதனையை உருவாக்கியது, கொழும்பு றோயல் கல்லூரி

In இலங்கை
Updated: 09:54 GMT, Jan 17, 2018 | Published: 09:54 GMT, Jan 17, 2018 |
0 Comments
1194
This post was written by : elayathambi

கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களின் உலக சாதனையை கின்னஸ் உலக சாதனை முகாமைத்துவம் உறுதி செய்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான வோட்டர் ரொக்கெற்றுகளை (Water Rockets) ஒரே நேரத்தில் அனுப்பி உலக சாதனை ஒன்றை கொழும்பு றோயல் கல்லூரி கடந்த ஆண்டு பதிவு செய்தது.

உலக விஞ்ஞான தினத்தன்று கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் 1950 வோட்டர் ரொக்கெற்றுக்களை ஒரே நேரத்தில் அனுப்பி இருந்தனர். கடந்த நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி மாணவர்களால் அனுப்பப்பட்ட வோட்டர் ரொக்கெற்றுக்களின் இந்த எண்ணிக்கையானது, அதுவரை இருந்த சீனப் பாடசாலை ஒன்றின் சாதனையை முறியடித்திருப்பதாக, கின்னஸ் உலக சாதனையின் முகாமைத்துவப் பிரிவு தற்போது அறிவித்திருக்கிறது.

சீனாவின் ஹுங்க் சிக் சஷீ என்ற உயர்நிலைப் பாடசாலை 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி ஒரே நேரத்தில் அனுப்பிய 1056 வோட்டர் ரொக்கெற்றுக்களே இதுவரையான உலக கின்னஸ் சாதனையாகப் பதிவாகி இருந்தது.

கொழும்பு றோயல் கல்லூரியின் வானியல் கழகம், கடந்த ஆண்டு விஞ்ஞான தினத்தன்று ஏற்பாடு செய்திருந்த இன் நிகழ்வில் ஆறாம் ஆண்டு முதல் பத்தாம் ஆண்டு வரையான இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg