Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூரில் புலி வெளியூரில் எலி: இந்தியாவை வீழ்த்தி முத்திரை பதித்தது தென்னாபிரிக்கா

In கிாிக்கட்
Updated: 10:33 GMT, Jan 17, 2018 | Published: 10:20 GMT, Jan 17, 2018 |
0 Comments
2089
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 135 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க தொடரை கைப்பற்றியுள்ளது.

கடந்த 13ஆம் திகதி செஞ்சுரியனில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸிற்காக 335 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக மார்க்ரம் 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 307 ஓட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக விராட் கோஹ்லி 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மோர்னி மோர்கல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

28 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டி வில்லியர்ஸ் 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால் 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியால், 151 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்திய ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ரோஹித் சர்மா 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் நிகிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் அணியை பொறுப்பேற்றதன் பின்னர், டெஸ்ட் தொடரொன்றை முழுமையாக இழக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg