Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடந்த ஆட்சியில் மலையகத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாமல் போனது ஏன்?: திகாம்பரம் கேள்வி!

In இலங்கை
Updated: 12:37 GMT, Jan 17, 2018 | Published: 12:37 GMT, Jan 17, 2018 |
0 Comments
1157
This post was written by : Ravivarman

எனக்கு மூன்று வருட காலப்பகுதியில் 5000 வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில், மஸ்கெலியா பிரதேச சபைக்கு ஐ.தே.க. வின் ‘யானை’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (புதன்கிழமை) மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”இன்று நாங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு உறுதியுடன் வீடு கட்டி கொடுகின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதி கொடுத்தால் விற்றுவிடுவார்கள் எனச் சிலர் கூறிவருகிறார்கள். ஆனால் இன்று தோட்டத் தொழிலாளர்கள் அந்த நிலையில் இல்லை தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கிறார்கள்.

என்னை பொறுத்த வரையில் தோட்ட தொழிலாளர்கள் கௌரவமாக வாழ வேண்டும். அண்மையில் கூட அமைச்சரவையில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதி வழங்க தேவையில்லை. பொமிட் கொடுத்தால் போதும் அவர்கள் விற்றுவிடுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

எமது தொழிலாளர்கள் அவ்வாறு இல்லை. அவர்கள் முன்பு போல் யானைக்கு மாத்திரம் வாக்களிப்பவர்களாக இருந்திருந்தால் ஒரு இலட்சத்திற்கும் மேல் எவ்வாறு அன்னத்திற்கு வாக்களித்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு நிலையான உறுதிப் பத்திரமே கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

அதனைக் கேட்ட பிரதமர் இப்போது எவ்வாறான உறுதிகளை வழங்குகிறீர்களோ அவ்வாறே செய்யுங்கள் என்று கூறியிருந்தார்” என அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.

Thiga (2) Thiga (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg