Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியது பாரிய தவறு: ஆறுமுகன் தொண்டமான்

In இலங்கை
Updated: 12:58 GMT, Jan 17, 2018 | Published: 12:58 GMT, Jan 17, 2018 |
0 Comments
1236
This post was written by : Ravivarman

மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றறோம். எனவே மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (புதன்கிழமை) மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,”75 வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்துக் கொடுத்தது. நமது முன்னோர்கள் உருவாக்கிய தேயிலை மலைகளை நமக்கு பிரித்து கொடுத்தால் என்ன? எம்மால் பராமரிக்க முடியும். தேயிலைக் காணிகள் பிரிக்கப்படுகின்றன.

நமது மரக்கறி தோட்டங்கள் தோட்ட அதிகாரிகளால் அபகரிக்கப்படுகின்றது. தற்போது இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். நான் அமைச்சராக இருந்த நேரத்தில் உரிய முறையில் வீடுகளை அமைத்து கொடுத்தேன். ஆனால் தற்போது முறையற்ற ரீதியில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் நாம் மானத்துடனும், மரியாதையுடனும் வாழ வேண்டும் என்றால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg