Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த் தேசிய அரசியலில் பெண் சமத்துவம் பேணப்படவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

In இலங்கை
Updated: 15:08 GMT, Jan 17, 2018 | Published: 15:08 GMT, Jan 17, 2018 |
0 Comments
1162
This post was written by : Ravivarman
maxresdefault-1-1-415x260

தமிழ்த் தேசிய அரசியலிலும் 50 இற்கு 50 என்ற விகிதத்தில் பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று (புதன்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி செயற்பட்டுவந்திருந்தது. அதே வழியில் தமிழ்த் தேசிய அரசியலிலும் 50 இற்கு 50 என்ற விகிதத்தில் பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும். புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களில் 70 வீதமானோர் பெண்களாக இருக்கும் சூழ்நிலையில் வீரம் செறிந்த இந்த மண்ணில் பெண்களின் பங்குபற்றுதல் அதிகளவில் இடம்பெறவேண்டும்.

இந்த மண்ணிலே விடுதலைப் போராட்டத்தினூடாக பெண்களின் பங்களிப்பு கட்டியெழுப்பப்பட்டு வந்திருந்தது. போர்ச்சூழலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினால் அது குறைவடைந்து பூச்சிய நிலைக்குச் செல்லும் அபாயகர நிலை காணப்படுகின்றது. இந்த நிலையை நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான சிறந்த ஒரு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் 25 சதவீதம் பெண்கள் பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சதவீதம் எங்களை பொறுத்தவரையில் குறைவாக காணப்படுகின்ற போதிலும் இதனை ஒரு ஆரம்பமாக கொள்ள முடியும்.

பெண் சமத்துவம் என்பது ஒட்டுமொத்த சமூகம் சார்ந்தது. இந்த சமத்துவத்தின் ஊடாகவே எமது தமிழ் தேசமும் கட்டியெழுப்பட முடியும். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தமிழ் மக்களை பிரநிதித்துவம் செய்து கலந்து கொள்ளும் புலம்பெயர் தமிழர்களில் 70 வீதமானோர் பெண்களாகவே உள்ளார்கள்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg