Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!

In இலங்கை
Updated: 17:27 GMT, Jan 17, 2018 | Published: 15:31 GMT, Jan 17, 2018 |
0 Comments
1144
This post was written by : Vithushagan

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்க விசேட மேல்நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக  நீதியமைச்சர் தலதா அத்துக்கோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு  மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்  பேச்சாளருமான கயந்த கணாதிலக்க தெரிவித்தார்.

அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்  மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமின் மூலம் வழக்குகளை விசாரிக்கக் கூடிய  மேல்நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படும்.

இதற்காக சட்ட வரைஞர் திணைக்களம் பிரேரணையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரேரணை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்காக சமர்பிக்கப்பட்டுள்ளதென அமைச்சரவை பேச்சாளர் மேலும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg