Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பு நல்லாட்சியிடம் சோரம் போகவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

In இலங்கை
Updated: 17:02 GMT, Jan 17, 2018 | Published: 17:02 GMT, Jan 17, 2018 |
0 Comments
1171
This post was written by : Vithushagan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ சோரம் போகவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான தேர்தல் என்பதைக் கடந்து சில அரசியல் ரீதியான முரண்பாடான கருத்துக்களை இந்த தேர்தலில் பலர் முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களில் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதான குற்றச்சாட்டை இன்று பலர் முன்வைத்து வருகின்றனர்.

கூட்டமைப்பையும், அவர்களது வடக்கு – கிழக்கு பிரதேசத்தையும் சிதைப்பதற்கான வேலைகள் தென்னிலங்கையில் நடைபெறுகின்றது. ஆயுத பலம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது.

புதிய அரசியலமைப்பு மாற்றம் பெறுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகத்திடம் நியாயம் கேட்கும் வகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காய்களை நகர்த்துகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ சோரம் போகவில்லை .

போராட்டத்திலும் சரி, அரசியலிலும் சரி சில இராஜதந்திரங்களுடன், உருவாக்கப்பட்ட மற்றும் செயற்பட்ட வரலாறுகளை நாம் பார்க்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg