Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு உதவுவதற்கு கனடா தயாராகவுள்ளது!

In இலங்கை
Updated: 17:11 GMT, Jan 17, 2018 | Published: 17:11 GMT, Jan 17, 2018 |
0 Comments
1270
This post was written by : Vithushagan

இலங்கையில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதற்கு கனடா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கென்னென் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கென்னென் விஜயம் செய்துள்ளார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள் மேற்கொண்டுவரும் கல்வி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

வாய்பேச முடியாத பிள்ளைகளுக்கு தொழில் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக கனடிய பல்கலைக்கழகம் ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த நிகழ்வில் குலோபல் பெயார் கனடாவின் இலங்கைக்கான பணிப்பாளர் குளோரியா விஸ்பன், கனடா தூதரகத்தின் அபிவிருத்தி மற்றும் உதவி பிரிவின் ஆலோசகர் கலாநிதி கலோட் கௌல்ட் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட தேவையுடைய பிள்ளைகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அவர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg