Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்சார சபையின் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்

In இலங்கை
Updated: 04:35 GMT, Jan 18, 2018 | Published: 03:02 GMT, Jan 18, 2018 |
0 Comments
1183
This post was written by : Elakkiya
z_p01-CEB

மின்சார சபையின் பணியாளர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மின்சாரசபை பணியாளர்களால் அடைத்துவைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் தலைவர் நேற்றைய தினம் கலகம் அடக்கும் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார். அவரை மீட்கும் பொலிஸாரின் முயற்சியில் மின்சாரசபை ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு மின்சாரசபை நிர்வாக அதிகாரிக்கு முறையற்ற விதத்தில் வேதன உயர்வு வழங்கப்பட்டதாகவும் அதனை உடன் ரத்துச் செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தும் மின்சார சபையின் தலைவரை அடைத்து வைத்து நேற்று போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg