Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்காலிக தீர்வை முன்வைக்கும் அரசாங்கமே எமது அரசாங்கம்: அர்ஜூண

In இலங்கை
Updated: 04:07 GMT, Jan 18, 2018 | Published: 04:07 GMT, Jan 18, 2018 |
0 Comments
1162
This post was written by : Elakkiya

விளையாட்டுத்துறையில் தற்காலிக தீர்வை முன்வைக்கும் அரசாங்கமாகவே எமது அரசாங்கம் உள்ளது என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் தடகள பயிற்சியாளர் யோகனந்த விஜயசூரியவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  (புதன்கிழமை) ஒலிம்பிக் குழு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. “சேவ் த ஸ்போட்ஸ்”  தன்னார்வ அமைப்பு ‘எதிர்கால விளையாட்டின் சுபீட்சம்’ என்னும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, “விளையாட்டு வீரர்கள் தொடர்பாக கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை செய்தனர். அவர்கள் விளையாடினார்களா என்பது கேள்விக்குறி. தேசிய வீரர்களை தேர்வு செய்யும் நிர்வாக குழுவில் உள்ள எத்தனைப் பேருக்கு கிரிக்கட் விளையாடத் தெரியும். இதனால் தான் இன்று கிரிக்கட் விளையாட்டு கீழ் நோக்கிச் செல்கின்றது. அதற்காக கிரிக்கட் வீழ்ந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். இன்னும் விழவில்லை. வீழ்வதற்கு சில காலம் எடுக்கும்.

விளையாட்டுத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வை வழங்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் மாறியுள்ளது. துரதிஸ்டவசமாக இந்த அரசாங்கத்தில் நானும் உள்ளேன். கடந்த காலத்திலேதான் எமது வீரர்கள் அதிகளவான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தனர். ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இந்த விமர்சனங்களை நிறுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்வில், பயிற்சியாளர் யோகனந்த விஜயசூரிய நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg