Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சகட்ட மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்

In கிாிக்கட்
Updated: 05:20 GMT, Jan 18, 2018 | Published: 05:19 GMT, Jan 18, 2018 |
0 Comments
1221
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், நேற்று (புதன்கிழமை) இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் பேச்சுவார்தையொன்று இடம்பெற்றது. இதன் போது அவருக்கு எதிர்வரும் அவுஸ்ரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர்களில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பென் ஸ்டாக்ஸ் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். அத்தோடு அவரது இரசிகர்களும் அவரது வருகையை முன்னிட்டு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், பென் ஸ்டோக்ஸ் வாலிபர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் இருந்து அவர் இருந்து நீக்கப்பட்டார்.

இவரது பங்களிப்பு இல்லாத காரணத்தால் சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இங்கிலாந்து அணி தொடரை இழந்தது. ஆகையால் அவரை எதிர்வரும் தொடர்களில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg