Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: இரண்டாம் சுற்று முடிவுகள்

In கிாிக்கட்
Updated: 06:47 GMT, Jan 18, 2018 | Published: 06:47 GMT, Jan 18, 2018 |
0 Comments
1171
This post was written by : Anojkiyan

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாம் நாளான நேற்று (புதன்கிழமை), ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால், இவோ கார்லோவிச், கில்லஸ் முல்லர் ஆகியோரும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா ஸ்விடோலினா, மார்டா கோஸ்ட்யுக், கரோலின் வோஸ்னியாக்கி, ஆகியோரும் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

தொடரின் மூன்றாவது நாளான நேற்று, ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 52ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டினாவின் லினார்டோ மேயரை எதிர்கொண்டார். 2 மணி 38 நிமிடம் நடந்த இப்போட்டியில், ரபேல் நடால் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், குரோஷியாவின் இவோ கார்லோவிச் 7-6 (7-3), 6-7(3-7), 7-5, 4-6, 12-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுய்சி சுஜிதாவை 4 மணி 33 நிமிடம் போராடி வீழ்த்தினார். அடுத்த மாதம் 39வது பிறந்த நாளை காண இருக்கும் இவோ கார்லோவிச் கடந்த 40 ஆண்டுகளில் அவுஸ்ரேலிய ஓபனில் 3வது சுற்றுக்கு முன்னேறிய அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

23ஆம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் கில்லஸ் முல்லர், 7-5, 6-4, 6-7,(5-7), 3-6, 6-2 என்ற செட் கணக்கில், துனிசியாவின் மாலிக் ஜாசிரி வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 4ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, செக் குடியரசு வீராங்கனை கேட்ரினா சினனாகோவாவை 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு போட்டியில், 15 வயதான உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர்செட்டில், அவுஸ்ரேலிய வீராங்கனை ஒலிவியா ரோகோவ்ஸ்காவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம் 1997ஆம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையை மார்டா கோஸ்ட்யுக் பெற்றார்.

இன்னொரு போட்டியில், உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஜானா பெட்டை தோற்கடித்து 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg