Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 06:54 GMT, Jan 18, 2018 | Published: 06:51 GMT, Jan 18, 2018 |
0 Comments
1141
This post was written by : Elakkiya

மாவடிமுன்மாரி பிரதான வீதியூடான மணல் ஏற்றிச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றும் சேதமடைந்துள்ள வீதியை புனரமைத்து தருமாறும் கோரி பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களினால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட தாந்தாமலை தொடக்கம் கொக்கட்டிச்சோலை சந்தி வரையான பாதை மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், தினமும் மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் வீதி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை மறித்து வீதிக்கு நடுவே நின்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் தமது பகுதிகளில் உள்ள மண்ணை வேறு பகுதிக்கு கொண்டுசெல்வதை நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

‘எங்களது பாதையினை அழிக்காதே, எங்களது வளங்களை சுரண்டாதே, நோயற்ற வாழ்விற்கு உறுதி கூறுவீர்களா?, ‘எங்களது உரிமையையும் வளத்தினையும் அழிக்காதே’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக சென்று, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ் குறித்த பகுதியில் மண் ஏற்றுவதை உடடினாயாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

DSC00294 DSC00291 DSC00274 DSC00303 DSC00330 DSC00339 DSC00352

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg