Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர்: தோல்வியின் பின் கோஹ்லி குமுறல்

In கிாிக்கட்
Updated: 06:57 GMT, Jan 18, 2018 | Published: 06:57 GMT, Jan 18, 2018 |
0 Comments
1489
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்த போதும், துடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) செஞ்சுரியனில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 135 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே கோஹ்லி இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் சிறந்த இணைப்பாட்டத்தை உருவாக்கி முன்னிலை பெற தவறிவிட்டோம். எங்களுடைய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் நாங்கள் சரிவை சந்தித்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர். நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். அந்த முயற்சி போதுமான அளவிற்கு இல்லை. குறிப்பாக களத்தடுப்பு துறையில் கோட்டை விட்டோம். தென்னாபிரிக்கா அதில் வெற்றி பெற்றுவிட்டது.

ஆடுகளம் மிகவும் சமதரை என நினைத்தோம். விளையாடும்போது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. நாணய சுழற்சி சுழற்றுவதற்கு முன்பு ஆடுகளம் எப்படி இருந்ததோ, அதில் இருந்த முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது என்று சக வீரர்களிடம் கூறினேன். குறிப்பாக முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்த பிறகு, அதை நாங்கள் சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் ஆடுகளத்தில் செயல்படுத்த விரும்பினேன். அந்த வகையில்தான் விளையாடினேன்.

தற்போது நான் அடித்த 153 ஓட்டங்கள் பெரிய விடயம் அல்லை. ஏனென்றால் நாம் தொடரை இழந்துவிட்டோம். அணி வெற்றி பெற்றிருந்தால் 30 ஓட்டங்கள் கூட முக்கியமானதாக இருந்திருக்கும். ஒரு அணியாக ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg