Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் பொகோ ஹராம் தாக்குதல்?- 12 பேர் உயிரிழப்பு

In
Updated: 06:57 GMT, Jan 18, 2018 | Published: 06:57 GMT, Jan 18, 2018 |
0 Comments
1220
This post was written by : Risha

வடகிழக்கு நைஜீரிய நகரான மைடுகுரியில் இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 48இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக போர்னாவிற்கான அரச அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலானது பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மைடுகுரி புறநகர் பகுதியின் சந்தைப் பகுதியில் இரண்டு குண்டுகளை வெடிக்கச்செய்து மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் அமைந்துள்ள குறித்த பகுதியானது அடிக்கடி பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டு தொடங்கிய மோதல்களின் மையமாக விளங்கும் வடகிழக்கு மாகாணமான போர்னாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான அதிரடி தாக்குதலை நைஜீரிய ராணுவம் அண்மையில் ஆரம்பித்தது.

ஆனால், இதனையும் மீறி பொதுமக்களையும், ராணுவத்தையும் இலக்குவைத்து பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg