Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலுவிழந்த இலங்கையுடன் விளையாடியது கால விரயம்: பிஷன் சிங் பெடி குற்றச்சாட்டு

In கிாிக்கட்
Updated: 07:51 GMT, Jan 18, 2018 | Published: 07:51 GMT, Jan 18, 2018 |
0 Comments
1668
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடருக்கு தயாராகாமல் வலுவிழந்த இலங்கை அணியுடன் விளையாடியது கால விரயம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரொன்றை முழுமையாக இழந்துள்ள இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடருக்காக இந்திய அணி எந்தவொரு நிலையிலும் தங்களை தயார் படுத்தவில்லை. இலங்கையுடன் விளையாடியது கால விரயம்.

தென்னாபிரிக்காவிற்கு தயாராகும் நிலையில் ஒன்றரை மாதமாக வலுவிழந்த அணியுடன் மோதியதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு கடினமான தொடருக்கு செல்வதற்கு முன் தயார் படுத்ததுவது அவசியமானதாகும்” என கூறினார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் அணியை பொறுப்பேற்றதன் பின்னர், டெஸ்ட் தொடரொன்றை முழுமையாக இழக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg