Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடந்த ஆண்டில் சாதித்த வீரர்கள் யார்? – இது ஐ.சி.சி கொடுக்கும் கௌரவம்

In கிாிக்கட்
Published: 08:06 GMT, Jan 18, 2018 |
0 Comments
1333
This post was written by : Anojkiyan

கடந்த ஆண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த வீரர்களுக்கான விருதை பெறும் வீரர்களின் பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரராக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவாகியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி தெரிவாகியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரராக பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சேர் கேரி சோபர்ஸ் கிண்ணத்திற்கான விருதும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.

இதுதவிர 2017ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணி விபரம்: டேவிட் வோர்னர், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டி கொக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென்ட் போல்ட், ஹாசன் அலி, ரஷித் கான் மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

2017ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி விபரம்: டீன் எல்கர், டேவிட் வோர்னர், விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், செத்தேஷ்வர் புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி கொக், அஸ்வின், ஸ்டார்க், ரபடா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் சிறந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

குறித்த விருது பட்டியலில் இந்திய வீரர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர். அதேவேளை குறித்த விருது பட்டியலில் இலங்கை வீரர் எவரின் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg