Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழராக மாறிய கனேடிய பிரதமர்: களைகட்டிய பொங்கல் விழா கொண்டாட்டம்

In கனடா
Updated: 08:59 GMT, Jan 18, 2018 | Published: 08:59 GMT, Jan 18, 2018 |
0 Comments
1128
This post was written by : Anojkiyan

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து பொங்கல் விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.

நேற்று (புதன்கிழமை) ஸ்காபுரோவில் இடம்பெற்ற குறித்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் ரூடோ, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தமிழில் ‘இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ள அவர், ஸ்காபுரோவில் இடம்பெற்ற தமிழர் பாரம்பரிய மாதம் மற்றும் தை பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமை மிக மகிழ்ச்சியான தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில், ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி, ஹரி சங்கரி ஆகியோர். கலந்துக்கொண்டனர்.

1213-wirelesscharger-1

52676_wijaya

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg