Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய மத்திய பொலிஸ் நிலையங்களின் தொலைதொடர்பு பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை!

In கனடா
Updated: 10:14 GMT, Jan 18, 2018 | Published: 10:14 GMT, Jan 18, 2018 |
0 Comments
1043
This post was written by : Anojkiyan

கனேடிய மத்திய பொலிஸ் நிலையங்களின் தொலைதொடர்பு பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் படி குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

நாடுதழுவிய அளவில் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள மத்திய பொலிஸ் நிலையங்களில் இந்த நிலைமை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்கள் சிலவற்றில் தொலைதொடர்பு பிரிவுகளில் அதற்கு தேவையான 50 சதவீத பணியாளர்கள் கூட நிரப்பப்படவில்லை என்று கூறப்படுவதுடன், தேசிய அளவில் இந்த ஆளணி பற்றாக்குறையானது 27சதவீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியாளர் பற்றாக்குறை அளவு கடந்த 2017 ஒக்டோபர் மாதத்தில் 27 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்பட்டதாகவும், சில பொலிஸ் நிலையங்களில், குறிப்பாக பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் போன்ற இடங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இந்த பணியளார்கள் பற்றாக்குறை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg