Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் பரிந்துரை அர்த்தமுள்ளது: வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா

In கனடா
Updated: 10:35 GMT, Jan 18, 2018 | Published: 10:35 GMT, Jan 18, 2018 |
0 Comments
1050
This post was written by : Anojkiyan

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் கால எல்லையை நீடிப்பது குறித்த பரிந்துரை அர்த்தமுள்ளது என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க ஜனாதிபதியின் இந்த பரிந்துரையானது அர்த்தமுள்ள ஒன்றாகவே தோன்றுகின்றது. நாங்கள் அனைவருமே மெக்சிக்கோ தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு திடமான கால எல்லை ஒன்றினை நிர்ணயிப்பது தேவையற்ற ஒன்று என்பதே தனது நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருகின்றது. இதனை ஒட்டிய அமெரிக்க ஜனாதிபதியின் பரிந்துரையும் ஆக்ககரமானதாகவே காணப்படுகின்றது” என கூறினார்.

மெக்சிக்கோவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தையை மார்ச் மாதத்தின் இறுதிக்கு பின்னரும் நீடித்துச் செல்லும் பரிந்துரையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg