Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

In
Updated: 15:13 GMT, Jan 18, 2018 | Published: 15:05 GMT, Jan 18, 2018 |
0 Comments
3248
This post was written by : S.K.Guna

பிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா நேற்று இரவு   கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வானது வரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது.

தைப்பொங்கல் விழாவினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது.

நிகழ்வானது அகவணக்கம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் பாடசாலை சிறுவர்களின் பொங்கல் விழா உரை என்பவற்றுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து தைத்திருநாள் விழா கொண்டாடப்படும் முறையும் அதன் சிறப்பையும் உணர்த்தும் வண்ணமாக காணொளியும் காண்பிக்கப்பட்டது.

இங்கு கொன்சவேற்றிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களான போல் ஸ்கலி ( paul scully ), பொப் பிளாக்மன் Bob Blackman , தெரேசா வில்லியர்ஸ் (Teresa Villers ) மற்றும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்டீவன் ரிம்ஸ் ( stephen timms ) மக் டோனா (McDonaagh), மைக் கேப்ஸ் (Mike Gapes) ஆகியோருடன் லிபரல் ஜனநாயக கட்சி உறுப்பினர் எட் டேவி ( Ed Davy MP Kingston) முதலானோர் உரையாற்றினார்

நாடாளுமன்ற  உறுப்பினர்களின் உரையில்; ஈழத்தமிழர்கள், பிரித்தானியாவில் முக்கிய வகிபாகத்தினை கொண்டுள்ளனர் என்றும் அவர்களின் உறவுக்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இன்னமும் சரியான நீதி கிடைக்கவில்லை என்றும் அதற்காக தாம் பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டனர்.

தைப்பொங்கல் விழாவில் சர்வமத குருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

P1660118

P1660113

P1660117

P1660118

P1660118

P1660118

P1660118

P1660118

P1660118

P1660118

P1660118

P1660118

P1660118

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg