Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீன அகதிகளுக்கு அமெரிக்கா செய்ய மறுத்ததை, பெல்ஜியம் செய்கிறது.

In
Updated: 15:41 GMT, Jan 18, 2018 | Published: 15:33 GMT, Jan 18, 2018 |
0 Comments
1183
This post was written by : elayathambi
149f9ee6998046c4836706459dbb525a_18

பலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியாக 19 மில்லியன் யூரோக்களை வழங்க பெல்ஜியம் முன் வந்துள்ளது. பலஸ்தீனத்திற்கான நிதி உதவிகளை அமெரிக்கா  நிறுத்தியுள்ள நிலையில் அதைப் பதிலீடு செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது. UNRWA என்ற பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு இந்த உதவித் தொகை கையளிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்கா தனது நிதி உதவியை தடை செய்ததை அடுத்து, பாரிய நிதி நெருக்கடிக்கு UNRWA இலக்காகி உள்ளது.  இவ்வாண்டுக்கான முதற்கட்ட நிதி உதவியை உடனடியாக கையளிக்க பெல்ஜியம் முன் வந்திருக்கிறது.  பெல்ஜியத் துணைப் பிரதமர்  அலக்ஸாண்டர் டி குரூ நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாண்டு அமெரிக்கா UNRWA  இற்கு வழங்கவிருந்த 125மில்லியன் டொலர்கள் கொடுப்பனவில், 65 மில்லியன் ஆரம்பக் கொடுப்பனவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க நேற்று முன்தினம் (செவ்வாய்க் கிழமை) அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், இடர்பாட்டிற்கு உள்ளாகி UNRWA  இற்கு உதவ வேண்டியது பெல்ஜியத்தின் கடமை என பெல்ஜிய துணைப் பிரதமர்  தெரிவித்துள்ளார். பல மில்லியன் அகதிகளுக்கு உதவும் இன் நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்த அவசர உதவிக்கான கோரிக்கைக்கு தாம் செவிமடுக்க வேண்டி இருந்ததாக, பெல்ஜியத் துணைப் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg