Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பங்கள்!

In இலங்கை
Updated: 16:21 GMT, Jan 18, 2018 | Published: 16:21 GMT, Jan 18, 2018 |
0 Comments
1330
This post was written by : Ravivarman

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்தில் அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் கண்காணித்ததாக புலனாய்வுப் பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவ்விடயம் உறுதியாகியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

அத்துடன் லசந்தவைக் கொலை செய்ததாக கடிதம் எழுதிவைத்துத் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி ஜயமான்ன, சம்பவம் இடம்பெற்ற திகதியில் கொழும்பிலேயே இருக்கவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg