Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை: பதாகையை அகற்ற உத்தரவு!

In இலங்கை
Updated: 16:27 GMT, Jan 18, 2018 | Published: 16:27 GMT, Jan 18, 2018 |
0 Comments
1141
This post was written by : Ravivarman

ராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விளம்பரம் குறித்து பிரதியமைச்சர் தனது டுவிட்டரில், பெண்களை அவமதிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை கோட்டையில் அனுமதிக்க மாட்டேன். இந்த விளம்பரப் பதாகையை அகற்றுமாறு நகர சபையிடம் கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

பிரபல உடற்பயிற்சிக் கூடத்தின் குறித்த விளம்பரப் பதாகையில், பீப்பாய் ஒன்றின் படம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், ‘இது பெண்களுக்குரிய தோற்றம் அல்ல’ என்ற வாசகமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg