Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்துத் தீவிரவாதத்தை பா.ஜ.க தூண்டுகிறது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

In இந்தியா
Updated: 16:42 GMT, Jan 18, 2018 | Published: 16:34 GMT, Jan 18, 2018 |
0 Comments
1145
This post was written by : elayathambi

இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இந்துத்துவ மேலாதிக்கத்தை முதன்மைப் படுத்துவதாக ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான, மனித உரிமைகள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் அங்கத்தினர்கள் பொது வெளியில் இந்து மேலாதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான வன்முறைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்படுவதாகவும் கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை கட்டுபடுத்துவதற்கோ அல்லது நீதி விசாரணைகள் மேற்கொள்வதற்கோ ஆளும் தரப்பு முன்வரத் தவறுகிற அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகளை பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதாக, அறிக்கை கூறியுள்ளது.

சிறுபான்மை மதங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான இத்தகைய வன்முறை மற்றும் அடக்கு முறைகளைத் தடுப்பதில் ஆளும் தரப்பினர் ஆர்வம் கொள்ளவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக் காட்டியுள்ளார்.

பசுக்களை விற்பனை செய்தமை மற்றும் பசுவதை ஆகியவற்றைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராயும் முஸ்லீம்களாயும் இருந்ததாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இவர்கள் மீது கடந்த ஆண்டில் 38 வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றைத் தடுத்து விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டிய காவல் துறையினர் வெறுமனே வேடிக்கை பார்த்துள்ளனர். அது மட்டுமன்றி குற்றமிழைக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக காவல் துறையினர் பதிவு செய்துமிருப்பதாக கடந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg