Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலைத்துறையில் வரம்பற்ற வளர்ச்சி வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்

In இந்தியா
Updated: 04:18 GMT, Jan 19, 2018 | Published: 04:18 GMT, Jan 19, 2018 |
0 Comments
1152
This post was written by : Kemasiya

கலைத்துறையில் வரம்பற்ற வளர்ச்சியை உருவாக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் மேலும் முயற்சிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெங்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ‘சலாம் அழைக்கும் மும்பை’ என்னும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் கலைத்துறையின் வளர்ச்சிக்கு இஸ்ரேல் பங்களிப்பு வழங்கும் என கூறிய அவர், இந்தியாவின் திரைத்துறை படைப்புகளை பாராட்டியிருந்தார்.

இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் அபிஷேக்பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டு இஸ்ரேல் பிரதமருக்கு வரவேற்பளித்தனர்.

இந்தியாவிற்கான 6 நாட்கள் அரசுமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவருடைய மனைவி சாரா ஆகியோர் டெல்லி, குஜராத் மற்றும் மும்பை என பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறனர்.

இப் பயணத்தின் போது  வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள், கலைஞர்கள் என பலரையும் சந்தித்து, இந்தியா மற்றும் இஸ்ரேலின் வளர்ச்சி, உறவுநிலை குறித்த நெதன்யாகு உரையாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

sfdsf xgvbfddg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg