Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய அரசாங்கம் தொடர்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை -அமைச்சர் மனோ கணேசன்

In இலங்கை
Updated: 10:17 GMT, Jan 19, 2018 | Published: 04:24 GMT, Jan 19, 2018 |
0 Comments
1157
This post was written by : Sujitharan

தேசிய அரசாங்கம் தொடரும். மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பத்திரிக்கையான லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இந்து கலாசாரத் திணைக்களமும் தினகரன் வார மஞ்சரியும் நேற்று(வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் அமைச்சர் மனோகணேசன் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதான கட்சிகளுக்கிடையே சூடான போட்டிகள் நிலவி வந்தாலும் 2020 வரை தேசிய அரசாங்கம் தொடர்வதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் நடைபெறும் சலசலப்புக்களை வைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் இடைநடுவில் கலையும் என்று பலரும் கனவு காண்கின்றார்கள். ஆனாலும் அது நனவாகாது. நாட்டை மீண்டும் இருண்ட யுகம் நோக்கிக் கொண்டு செல்வதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.

நாட்டில் இருந்து மதவாதம், இனவாதம், பிரதேசவாதம், அரச பயங்கரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றை துடைத்து எறிந்திருக்கின்றோம். எமது நாட்டில் 19 இனங்கள், 4 மதங்கள், 3 மொழிகள் என்று உள்ளதால் இந்த நாட்டை ஒரு இனத்துக்குரிய நாடு என்று சொல்ல முடியாது. அதனால் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழலாம்.

அனைத்து இன மக்களும் பயன் பெறும் வகையில் வடக்கிலும் தெற்கிலும் உள்ள அடிப்படைவாதிகளுக்கு மத்தியில் அரசாங்கம் தனது செயற்பாடுகளை நடுநிலையாக முன்னெடுத்து வருகின்றது. அரசாங்கம் தற்போது உருவாக்கி வருகின்ற அரசியல் யாப்பு கட்சிகளுக்கான யாப்பு அல்ல. அது நாட்டுக்கான அரசியல் யாப்பு.

மாணவர்களிடம் இருக்கும் தேசிய சகவாழ்வு அரசியல்வாதிகளிடம் இல்லை என்பதை அண்மையில் பாராளுமன்றத்தில் கண்டோம். தேசிய சகவாழ்வு என்றால் என்ன என்பதை அறிய அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை நான் சபாநாயகரிடம் முன்வைத்தேன்” என்றார்.

இதன் போது பொங்கல், பூஜைகள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் உட்பட இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

IMG_2495

IMG_2578

IMG_2526

IMG_2537

IMG_2589

IMG_2598

IMG_2523

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg