Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனை கைது செய்யக்கோரும் அதிகாரம் ஜெயக்குமாருக்கு இல்லை : தங்கத் தமிழ்ச்செல்வன்

In இந்தியா
Updated: 17:22 GMT, Jan 19, 2018 | Published: 04:39 GMT, Jan 19, 2018 |
0 Comments
1475
This post was written by : Kemasiya

சின்னம்மாவின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்று பதவிக்கு வந்த ஜெயக்குமார் இப்போது டி.டி.வி.தினகரனை கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது தவறு என சட்டமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர், “தினகரனை கைது செய்யக்கோரும் அதிகாரம் ஜெயக்குமாருக்கு இல்லை எனவும். அ.தி.மு.க. கட்சியினர் மக்களிடம் தவறான கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் கூறினார்.

அத்துடன் முதலமைச்சரை மாற்றக்கோரி ஆளுநரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை தாம் தாக்கல் செய்துள்ளமை தவறு அல்ல என்றும், தம்மை சட்டமன்றி உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், அதன் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் குறித்த தீர்ப்பு சாதகமாக இருப்பின் மீண்டும் சட்டமன்றம் செல்லவுள்ளதாகவும், இல்லை எனில் மீண்டும் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை வசப்படுத்தி சட்டமன்றம் செல்வோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது எந்த சந்தர்பத்திலும் தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்டாலும் அவருடைய புதிய கட்சியில் இணையப்போவதில்லை” என்றும் தங்கத் தமிழச்செல்வன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg