Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்வையற்றோருக்கான உலகக்கிண்ண போட்டியில் இலங்கைக்கு மூன்றாமிடம்!

In கிாிக்கட்
Updated: 05:07 GMT, Jan 19, 2018 | Published: 05:05 GMT, Jan 19, 2018 |
0 Comments
1303
This post was written by : Varshini

பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான முதற்சுற்றுப்போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கே வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

சார்ஜாவில் நடைபெற்றுவரும் பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை மறுதினம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 156 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 489 என்ற மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைக் குவித்தது. பதிலடித்தாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 7 விக்கட்கள் இழப்பிற்கு 333 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

அரையிறுதியில் தோல்வியைத் தழுவியபோதும் பார்வையற்றோருக்கான உலகக்கிண்ண போட்டிகளின் மூன்றாவது இடத்தினை இலங்கை அணி பெற்றமை விசேட அம்சமாகும்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதற்சுற்றுப்போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கே வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

இம்முறை ஐந்தாவது தடவையாக நடைபெறும் பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணப்போட்டியில் தற்போது நடப்புச் சம்பியன்களாக இந்திய அணியே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், நேபாளம் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் பார்வையற்றோர் உலகக்கிண்ண போட்டிகள் இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவிற்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blind cricket world cup (2) blind cricket world cup (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg