Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதக் கருத்து கூறிய நயினர் நாகேந்திரர் மீது வழக்கு

In இந்தியா
Updated: 05:19 GMT, Jan 19, 2018 | Published: 05:18 GMT, Jan 19, 2018 |
0 Comments
1214
This post was written by : Kemasiya

இனவாதத்தை தூண்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டில், பா.ஜ.க.வின் மாநிலத் துணை தலைவர் நயினர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) நயினர் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட ஆறுபேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆழ்வர்களில் ஒருவராக கருதப்படும் ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை எழுப்பியதாக, கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக நெல்லையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நயினர் நாகேந்திரன், “இந்து மதத்தை தவறாக பேசுபவர்கள் கொலை செய்யப்படவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பொது இடத்தில் மதவாதத்தை தூண்டும் கருத்துக்களை கூறிவருகிறார் என்ற குற்றச்சாட்டில் பிரிவு-4 இன்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஜனவரி 7ஆம் திகதி ராஜபாளையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வைரமுத்து, சில வரலாற்று ஆசிரியர்கள் குறித்து பேசும் போது அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய கருத்தை முன்வைத்திருந்தார்.

குறித்த கருத்து ஆண்டாளை இழிவாக கூறப்பட்டுள்ளது என்றும், அதனை வைரமுத்து கூறியமை இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல் எனவும் கூறி அவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg