Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பையில் திரைப்படத்துறை கலையகம் ஒன்றில் தீ விபத்து

In இந்தியா
Updated: 07:26 GMT, Jan 19, 2018 | Published: 07:26 GMT, Jan 19, 2018 |
0 Comments
1270
This post was written by : Kemasiya

மும்பை உள்ள ரோயல் பரோல் கட்டிடத்தின் முதலாம் மடியில் பழமை வாய்ந்த திரைப்படத்துறை கலையகம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் தீயணைப்பில் ஈடுபட்ட வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், தீயை கட்டுக்குள் கொண்டுவர 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் தீ இதுவரை முழுமையாக அணைக்கப்படாத நிலையில், தொடர்ந்தும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

குறித்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், கட்டடம் பழமை வாய்ந்ததோடு கலையகமும் நீண்டகாலம் மூடப்பட்டுள்ளமையினால் மின்சார கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் மும்பை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர். அத்துடன் அண்மைக்காலமாக  மும்பையில் தொடர்ந்தும் தீ விபத்துக்கள் எற்படுகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.

cngn fgjhfjhnfjn jmhhh

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg