Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்கடத்தலை முறியடிக்க இலங்கைக்கு அமெரிக்கா உதவி!

In இலங்கை
Updated: 09:21 GMT, Jan 19, 2018 | Published: 05:29 GMT, Jan 19, 2018 |
0 Comments
1121
This post was written by : Sujitharan

எதிர்வரும் 3 ஆண்டுகளில் ஆட்கடத்தலை முறியடிப்பதற்கு இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாயை ஐக்கிய அமெரிக்க அரசு வழங்கவுள்ளது.

இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார அலுவலகத்தினால் இலங்கையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு இந்த தொகை வழங்கப்படுவதாக, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கூறுகையில், நவீன அடிமைத்தனத்தின் காரணங்களைக் கையாள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேசப் பங்காளர்களுடன் பணியாற்றுவதற்கு ஐக்கிய அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில்,  ஆட்கடத்தல் சம்பவங்களை எதிர்த்து போராடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு  தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg