Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். கொலைச் சம்பவம் -சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 05:43 GMT, Jan 19, 2018 | Published: 05:43 GMT, Jan 19, 2018 |
0 Comments
1777
This post was written by : Sujitharan

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை பகுதியில் கொலை செய்யப்பட்ட குழந்தை மற்றும் தற்கொலை செய்து கொண்டவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ராமகமலன் , சடலங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அவரது உத்தரவின் பிரகாரம் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று காலை இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பான பின்னணி குறித்த தகவல்கள் எவையும் வெளியாகாத நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் குழந்தை மீது கொடூர வாள்வெட்டு! – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை பகுதியில் 3 வயது குழந்தையொன்று வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, வாள்வெட்டை மேற்கொண்டவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவத்தில் வாள்வெட்டை மேற்கொண்டவரின் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ள இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வண்ணார்ப்பண்ணை வடமேற்கு பத்திரகாளிஅம்மன் கோயில் வீதியில் வசிக்கும் குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, இன்று காலை வாள்வெட்டை நடத்தியவரின் தாயும் அவரது  இளைய மகனுடைய 3 வயது பெண் குழந்தையும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வாளுடன் வீட்டிற்குள் பிரவேசித்த அந்தத் தாயின் மூத்த மகனான ஈஸ்வர் என்பவர், தனது தாயையும் தன் சகோதரரனின் மூன்று வயது குழந்தையையும் கொடூரமாக வெட்டியுள்ளார்.
இத்தாக்குதலில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, தாய்  கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலையாளியான ஈஸ்வர் நஞ்சருந்தியதோடு,   வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பான பின்னணி தெரியவராத நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG-828f3f3c34e545a97f440a7d99770995-V

IMG-f45d905ac63680d7d2b39e04d1fb169b-V

IMG-fd9a7f1c4988d90039b35657df0533a1-V

50e44260-c2d4-4e7f-b94f-717d72890db7

IMG-7436

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg