Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாப்வே எதிர்க்கட்சித் தலைவர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:30 GMT, Jan 19, 2018 | Published: 06:30 GMT, Jan 19, 2018 |
0 Comments
1225
This post was written by : Elakkiya

நாடுகடத்தப்பட்ட சிம்பாப்வேயின் முக்கிய  எதிர்க்கட்சித் தலைவர் ரோய் பென்னட் உள்ளிட்ட ஐவர் நியூமெக்சிகோவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க மாநிலத்தின் வடக்கு பகுதியான நியூ மெக்சிகோவில் புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக ரோய் பென்னட்டின் கட்சி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

விபத்தில் ரோய் பென்னட்டுடன் அவருடைய மனைவியும் டெக்ஸாஸை தளமாகக் கொண்ட முதலீட்டாளர் ஒருவரும், நன்கொடையாளர் ஒருவருடன், விமானியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் விடுமுறை நிமித்தம் அமெரிக்க சென்றிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் தீப்பிடித்து எரிந்ததாகவும் மெக்சிகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிம்பாப்வே எதிர்க்கட்சியான எம்.டி.சியின் முன்னாள் பொருளாளராக ரோய் பென்னட், சிம்பாப்வே அரசியலில் முக்கிய நபராக இருந்துள்ளார். சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் ஆட்சியில் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg