Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியன்னா பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிரிய அரசாங்கம் இணக்கம்

In உலகம்
Updated: 06:57 GMT, Jan 19, 2018 | Published: 06:57 GMT, Jan 19, 2018 |
0 Comments
1218
This post was written by : Elakkiya

வியன்னாவில் இம்மாதம் நடைபெறவுள்ள சிரிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு சிரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சிரியாவுக்கான ஐ.நா. விசேட தூதுவர் ராம்சி எசெல்டின் ராம்சி நேற்று (வியாழக்கிழமை) மேற்படி தகவலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், சிரிய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் ஃபைசல் மெக்காட்டுடனான சந்திப்பின் போது, சிரிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் வியன்னா பேச்சுவார்த்தைகளில் சிரிய அரசாங்கம் பங்கேற்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்ற எதிர்ப்பு கோரிக்கைக்கு விடையிறுக்கும் வகையிலான முன் நிபந்தனைகள் எவையும் வியன்னா பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா. வின் அணுகுமுறை மிகவும் தெளிவாக உள்ளது. எந்தவொரு கட்சியினதும் முன்நிபந்தனைகளை நாம் ஏற்கவில்லை. இது தவிர்க்க முடியாத விதி. சிரிய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சருக்கு நாம் முன்மொழிந்த தலைப்புக்களிலான எமது கலந்துரையாடலில் ஒவ்வொரு கட்சியும் பங்கேற்கும் என்று நாம் நம்புகின்றோம். ஆனால் கட்சியின் எந்தவொரு முன் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் வியன்னா பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் சுற்று வியன்னா பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 29 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ரஷ்ய ஆதரவுப் பேச்சுவார்த்தைகள் சொச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg