Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சிவக்குமார்!

In சினிமா
Updated: 06:51 GMT, Jan 19, 2018 | Published: 06:51 GMT, Jan 19, 2018 |
0 Comments
1086
This post was written by : Ravivarman

தன்னம்பிக்கை உருவாக்கும் புத்தகங்களை நாடிச் செல்வதுடன், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நடிகர் சிவகுமாரின் வரலாற்றை விளக்கும், ‘ஓவியர், நடிகர், பேச்சாளர் சிவகுமார்’ என்ற புத்தகத்தை, நடிகர் சிவகுமார் கையெழுத்திட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் வாசகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நடிகர் சிவகுமாரின் வரலாற்றை, ‘ஓவியர், நடிகர், பேச்சாளர் சிவகுமார்’ என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அவர் தனது திரையுலக அனுபவங்களையும், அவர் வரைந்த ஓவியங்களின் பின்னணிகளையும் சுவையாக சொல்வதுடன், இந்த நூலை எழுத்தாளர் ‘வணங்காமுடி’ தொகுத்து வழங்கியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg