Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேட்புமனு விவகாரம்: மஹிந்த அணியில் மனு உச்சநீதிமன்றால் நிராகரிப்பு!

In இலங்கை
Updated: 07:03 GMT, Jan 19, 2018 | Published: 07:03 GMT, Jan 19, 2018 |
0 Comments
1223
This post was written by : Varshini

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்துள்ளது.

மஹரகம நகர சபையில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனு, தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg