Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன் : வவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

In டெனிஸ்
Updated: 07:11 GMT, Jan 19, 2018 | Published: 07:08 GMT, Jan 19, 2018 |
0 Comments
1141
This post was written by : Sujitharan

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வரும், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், சுவிசர்லாந்தின் முன்னிலை டென்னிஸ் வீரரான வவ்ரிங்கா (WAWRINKA), அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில், உலகின் 8 ஆம் நிலை வீரரான வவ்ரிங்கா, 97 ஆம் நிலையிலுள்ள அமெரிக்க வீரர் டெனிஸ் சன்ட்கிறனை  (Tennys Sandgren) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெனிஸ் சன்ட்கிறன், வவ்ரிங்காவை திக்குமுக்காட வைத்தார்.

இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சன்ட்கிறன், 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வவ்ரிங்காவை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இந்த வருடத்தினை ஆரம்பித்த வவ்ரிங்கா, வேதனையுடன் தொடரிலிருந்து வெளியேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg