Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒகினாவா வான்பரப்பில் அமெரிக்க விமானம் : ஜப்பான் குற்றச்சாட்டு

In
Updated: 07:32 GMT, Jan 19, 2018 | Published: 07:32 GMT, Jan 19, 2018 |
0 Comments
1269
This post was written by : Elakkiya

ஜப்பானின் ஒகினாவா தளத்துக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு மேலான வான்பரப்பில் ஹெலிக்கொப்டர் பறப்பை தவிர்ப்பதாக வழங்கிய உறுதிமொழியை அமெரிக்க இராணுவம்  மீறியுள்ளதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.

ஒகினாவாவின் தென் தீவிலுள்ள ஃபுட்டென்மா தளத்துக்கு அடுத்ததாக குறித்த பாடசாலை அமைந்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க கடற்படை ஹெலிகொப்டர் ஒன்றின் ஜன்னல் குறித்த பாடசாலை மைதானத்தில் விழுந்ததில் இருந்து அதிருப்திக்கான ஒரு மையப்புள்ளியாக இது மாறியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடசாலையை சுற்றியுள்ள வான்பரப்பில் தமது விமானங்கள் பறப்பில் ஈடுபடாது என அமெரிக்க இராணுவம்  உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க கடற்படை ஹெலிகொப்டர் குறித்த வான்பரப்பில் பறந்ததாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் “இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இதற்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க தமது ஹெலிகொப்டர் பாடசாலை வான்பரப்பில் பறக்கவில்லை என்று கடற்படை வலியுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg