Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தை தாக்கிய புயல்காற்று- 8 பேர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 07:57 GMT, Jan 19, 2018 | Published: 07:57 GMT, Jan 19, 2018 |
0 Comments
1290
This post was written by : Elakkiya

வடக்கு ஐரோப்பாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஃபிரெட்றிக் (Friederike) புயல்காற்று காரணமாக தீயணைப்பு வீரர்கள் இருவர் உட்பட எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் பெருமளவானோர் உயிரிழந்ததாகவும் காற்றினால் கார் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, ஜேர்மனியில் சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்திய புயல் காற்று காரணமாக ஜேர்மனியில் நேற்றைய தினம் நீண்டதூர ரயில் சேவைகளும் பல பிராந்திய ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாக ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ஸ்கிப்போல் விமான நிலையத்தின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஜேர்மனியில் சுமார் 65ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்க்கியுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன .

மேலும் இப்புயல் காற்று தற்போது போலந்தை கடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

photo_verybig_187153 99647657_nethstrailerepa-1200x545_c _99646476_germany_storm_1_epa 601118.1516334667.b

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg