Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லஞ்சம் கொடுக்க முற்பட்ட ஆணையாளர் கைது

In இந்தியா
Updated: 08:52 GMT, Jan 19, 2018 | Published: 08:46 GMT, Jan 19, 2018 |
0 Comments
1123
This post was written by : Kemasiya
dfafd

லஞ்சம் கொடுக்க முற்பட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

75 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக வாங்க முற்பட்டதாக கூறி, வரதராஜன் மற்றும் அவருக்கு தரகராக செயற்பட்ட நாகராஜன் ஆகிய இருவரையும் லஞ்ச ஊழல் தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொதுமகன் ஒருவர் குறித்த மாநகராட்சி ஆணையரிடம் தனது தனிப்பட்ட விடத்தை தீர்த்துவைக்க மனு சமர்பித்துள்ளார்.

பலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தரகரான நாகராஜா என்பவர் பணம் இருந்தால் இலகுவாக பிரச்சினையை தீர்க்க முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்காக ஒருலட்சம் ரூபாய் பணத்தை குறித்த பொதுமகனிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த பொதுமகன் 75ஆயிரிம் ரூபா தான் கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு சம்மதித்த நாகராஜன் இன்று அவரை ஆணையர் அலுவலகத்திற்கு பணத்தோடு வரும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பணம் கொடுக்க உள்ளதை ரகசியத தகவல் மூலம் அறிந்த லஞ்ச ஊழல் பிரிவினர் அலுவலகத்திற்கு வந்து பணம் கொடுக்க முற்படும் வேளையில் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg