Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காயம் ஒரு தடையல்ல! ஹலெப்பின் அசத்தல் ஆட்டம்

In கிாிக்கட்
Updated: 07:56 GMT, Jan 19, 2018 | Published: 07:56 GMT, Jan 19, 2018 |
0 Comments
1216
This post was written by : Sujitharan

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹலெப், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் காயத்துடன் விளையாடியபோதிலும், வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார்.

மெல்பேர்னில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றுப் போட்டியில், வெற்றி பெற்ற ஹலெப் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹலெப் (SIMONA HALEP), 81 ஆம் நிலையிலுள்ள கனடாவின் பொவ்சார்ட்டை (Bouchard) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், ஹலெப் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

கணுக்காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற ஹலெப் தொடர்ந்தும் காயத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் சுற்றுப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg