Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரை வென்றது நியூசிலாந்து! வெறுங்கையோடு நின்றது பாகிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 08:51 GMT, Jan 19, 2018 | Published: 08:51 GMT, Jan 19, 2018 |
0 Comments
1283
This post was written by : Sujitharan

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 5-0 என வெற்றி கொண்டு, பாகிஸ்தான் அணியை முழுமையாக வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரிலும் விளையாடுவதற்காக, பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது.

அங்கு, முதலில் ஒருநாள் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று, வெலிங்கடனில் நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நியூசிலாந்து அணியும், அறுதல் வெற்றியையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியும் களமிறங்கின.

இரு அணிகளுக்கும் வெற்றிவாய்ப்பு சமமாக இருந்த இந்த போட்டியில், நியூசிலாந்து அணி 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 50 ஒவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்த முறையும் பிரகாசித்த மார்ட்டின் குப்டில் 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து, 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 49 ஒவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 15 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இந்த போட்டியில் மாத்திரமல்லாது, தொடரிலும் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மாட்டின் குப்டில், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg