Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைரமுத்து மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

In இந்தியா
Updated: 09:40 GMT, Jan 19, 2018 | Published: 09:40 GMT, Jan 19, 2018 |
0 Comments
1171
This post was written by : Kemasiya

கவிஞர் வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதன் மூலம், இந்து மதத்தை வைரமுத்து அவமதித்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனுவில் எந்தவிதமான குற்றமும் இல்லை என்றும், ஆண்டாள் குறித்த விடயத்தில் வைரமுத்து மேற்கோள் காட்டியே பேசியுள்ளார் என்றும் கூறி குறித்த வழக்கிற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறாக பேசியதனூடாக இந்துமதத்தை அவமதித்தாக கூறி அவர் மீது தொடரப்பட்ட வழக்கு மேற்படி இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg