Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ வீரர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்!

In இந்தியா
Updated: 09:10 GMT, Jan 19, 2018 | Published: 09:10 GMT, Jan 19, 2018 |
0 Comments
1137
This post was written by : Ravivarman

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் சுரேஷ் வீரமரணம் அடைந்ததற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தாய்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் வீரமரணம் அடைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

சுரேசின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் மிக முக்கியமான பணியில் சுரேஷ் காட்டியுள்ள வீரத்திற்கும், தியாகத்திற்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg